‘அரச பெருந்தோட்ட நிறுவனங்களும் 1000 ரூபாவை வழங்கிவிட்டன’

அரச பெருந்தோட்டங்கள் அனைத்திற்கும் 1000 ரூபாய் சம்பளம் முழுமையாக இன்று வழங்கப்பட்டுள்ளது என பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அரச பெருந்தோட்ட நிறுவனமான எஸ்.எஸ்.பி.சி (S.S.P.C)க்கு 1000 ரூபாய் சம்பளம் கடந்த வாரம் வழங்கப்பட்டதை தொடர்ந்து, ஜனதா எஸ்டேட் மேம்பாட்டு வாரியம் (J.E.D.B), எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் (Elkaduwa plantation) ஆகிய நிறுவனங்களின் கீழ் இயங்கும் தோட்டங்களுக்கும் 1000 ரூபாய் சம்பளம் இன்று முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

ஜனதா எஸ்டேட் மேம்பாட்டு வாரியம் (J.E.D.B) நிறுவனத்தின் கீழ் இயங்கும் கண்டி, மொனறாகலை, பதுளை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 18 தோட்டங்களில் பணியாற்றும் 4000 தொழிலாளர்களுக்கும், மாத்தளை மாவட்டத்தில் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் (Elkaduwa plantation) கீழ் இயங்கும் 09 தோட்டங்களை சேர்ந்த 1,200 தொழிலாளர்களுக்கும் ஆயிரம் ‌ரூபாய்ப்படி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பறித்த மேலதிகக் கொழுந்துகளுக்கான கொடுப்பனவுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் வேண்டுகோளுக்கிணங்க, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டில், அரச பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு இன்று முழுமையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles