அரசியலுக்கு விடை கொடுத்துவிட்டாரா சுசில்?

” எதிர்க்கட்சியில் இணையும் திட்டம் எனக்கு இல்லை. அன்று முதல் இன்றுவரை கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னெடுத்துவருகின்றேன். “

இவ்வாறு இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகளிலும் முன்னிலையாகின்றேன். அரசியல்சார் நிகழ்வுகளிலும் பங்கேற்றுவருகின்றேன். எனவே, ஓய்வுபெறும் எண்ணம் இல்லை.

அமைச்சுப் பதவியொன்றை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை. தற்போதைய நாடாளுமன்றில் நல்ல அறிவுடைய, கல்வித் தகமையுடைய, நல்ல அனுபவமுடைய நபர்களின் அறிவு, அனுபவம் என்பன இழிவுபடுத்தப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. “- என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles