அரசியல் லஞ்சமாக வடக்குக்கு 32 பார் லைசன்கள்!

ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் அரசியல் இலஞ்சமாக வடக்கு மாகாணத்திற்கு 32 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் நாடளாவிய ரீதியில் 361 மதுபானசாலைகளுக்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (4) நடைபெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான உரையின் போது அனுமதி பத்திரம் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பித்து, உரையாற்றுகையிலேயே மேற்படி தகவலை அவர் வெளியிட்டார்.

மேற்படி ஆவணங்களின் பிரகாரம் மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிகளும், தென்மாகாணத்தில் 48,வடக்கு மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45,வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 அனுமதி பத்திரங்கள் என்ற அடிப்படையில் 9 மாகாணங்களுக்கும் மொத்தமாக 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.

அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9,மாத்தறை 5,அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை , கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலநறுவை 3. புத்தளம் 6, குருநாகல் 8 . பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2 என்ற அடிப்படையில் மொத்தமாக 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்துக்கு அனுமதி பத்திரம் ஏதும் வழங்கப்படவில்லை.

2024 ஜனவரி முதல் இவ்வாறு அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சி தாவலுக்காக அரசியல் இலஞ்சமாகவே மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.  குறித்த விபரங்களை நாட்டு மக்களும் இனி தெரிந்துக் கொள்ளலாம்.” – எனவும் அவர் கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles