” கட்சி மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும்பட்சத்தில் நாளை வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறுவதற்கு நாம் தயார்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளருமான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் இன்று நடைபெற்ற கட்சி கிளைக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அரசிலிருந்து வெளியேறாமல் ஏன் இன்னும் அரசுடனேயே இருக்கின்றனர் என சிலர் கேள்வி கேட்கின்றனர். எமது கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானமொன்றை எடுக்கும் பட்சத்தில் நாளையே பதவிகளை துறந்து வெளியேறுவதற்கு தயார்.
எமது முதுகில் சவாரி செய்துவிட்டு, எம்மை கட்டுப்படுத்த முற்படுகின்றனர். எனவே, உள்ளாட்சி மன்றங்களில் நடக்கும் விடயங்கள் தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக முடிவெடுங்கள். கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காது.” – என்றார்.