” இந்த அரசுக்கு விரைவில் வீடு செல்ல வேண்டிவரும்.” – என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நான் தற்போது செயற்பாட்டு அரசியலில் இல்லை. கட்சியில் இருந்தும் விலகிவிட்டேன். நாட்டு மக்கள் இந்த அரசுமீது கடும் சீற்றத்தில் உள்ளனர். எனவே, அரசுக்கு விரைவில் வீடு செல்ல வேண்டிவரும்.
நாமும் இந்த அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தயாராகவேண்டும். விரைவில் அனைவரும் ஓரணியில் திரளவேண்டிய சூழ்நிலைவரும். அதுவரை காத்திருப்போம்.” – என்றார்.










