” மக்கள் கோரிக்கையை ஏற்று இந்த அரசு பதவி விலகாவிட்டால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – என்று எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
” 20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக ஜனாதிபதிக்கு சாதாரண நிறைவேற்று அதிகாரம் அல்லாமல் சிறப்பு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டியது அவசியமாகும்.
அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது. ராஜபக்சக்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோா் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுக்கு தயார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படாவிட்டால், அரசு பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும்.” – என்றார் சஜித்.