அரச, அரச பங்குள்ள நிறுவனங்கள், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை நாளை மேற்கொள்ளவுள்ளன.
அத்துடன், எதிர்வரும் 06 ஆம் திகதி நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கும் மேற்படி தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்த எதிர்ப்பு போராட்டத்திற்காக சுமார் ஆயிரம் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடன் தீர்வை காணுமாறும், அரசியல் ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முன்வருமாறு வலியுறுத்தியும், அரசுக்கு அழுத்தம் கொடுத்துமே தொழிற்சங்கங்களால் போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் இப்போராட்டம் இடம்பெறுகின்றது.
மலையகத்திலுள்ள தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.










