எரிபொருட்களின் விலை உயர்வு மற்றும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக ஜே.வி.பியால் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கை நேற்று மாலை ஆரம்பமானது.
மஹரகம நகரில் நேற்று ஆரம்பமான போராட்டம்,
22, 23 மற்றும் 25 ஆம் திகதிகளிலும் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ளது .
ஜே.வி.பியின் செயற்குழு உறுப்பினர்களும், மாவட்ட அமைப்பாளர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்கவுள்ளனர்.
சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றியே எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதேவேளை, எரிபொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.










