அரசை பாதுகாக்கவோ அல்லது கவிழ்க்கவோ தாம் வரவில்லை எனவும் வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் தமக்குத் தேவை எனவும் முன்னாள் பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதியின் உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அண்மையில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை அந்நியச் செலாவணி நெருக்கடியை மட்டுமே சுட்டிக்காட்டியுள்ளது. வேறு எதுவும் பேசவில்லை.மற்றும் நீண்ட கால தீர்வுகள் தேவை. தான் பொறுப்பேற்ற போது ஏழரை பில்லியன் டொலர் கடனாக இருந்ததாக ஜனாதிபதி கூறுகிறார். நம் பிரச்சினைகளுக்குக் காரணம் கடன் அல்ல. கடந்த கால விடயங்களால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. நாங்கள் அரசாங்கத்தை பாதுகாக்கவோ அல்லது கவிழ்க்கவோ இங்கு வரவில்லை. வீழ்ந்தவர்களை எழுப்புவதுதான் நமக்குத் தேவை என்றார்.
