அரிமா சங்கத்தினரால் இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு

வட கொழும்பு யுனைட்டெட் – District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு 15 மட்டக்குழி புனித மேரிஸ் தேவாலயத்தில் வைத்து மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் லயன் வைத்தியர் அனோமா விஜேசிங்க MJF தலைமையில் ஏனைய அரிமா சங்க அங்கத்தினர்களின் பங்களிப்புடனும் இரண்டாவது பிரதி மாவட்ட ஆளுநர் லயன் டபிள்யூ ராஜித ரொட்ரிகோ முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தேவையுடையவர்களுக்காக நடாத்தப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் இலவச நீரழிவு பரிசோதனை இரத்தப் பரிசோதனைகள் கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவித்த அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் லயன் வைத்தியர் அனோமா விஜேசிங்க MJF…
எமது அரிமா சங்கம் மூலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை பல்வேறுபட்ட சமூக சேவைகளை செய்து வருவதோடு இதுபோன்ற இலவச வைத்திய முகாம்கள் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் வைபவங்கள் போன்றவை இந்த மாதம் முழுவதும் செய்வதற்கு நாங்கள் உத்தேசித்து உள்ளோம் அந்த வகையில் இன்று நடைபெறுகின்ற இந்த நிகழ்வை தொடர்ந்து வத்தலை நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களிலும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்வதற்கு உத்தேசித்து உள்ளோம் ஆகவே தேவையுடையவர்கள் எங்களை தொடர்பு கொண்டு இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles