மக்கள் போராட்ட (அறகலய) குழுவின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளராக இருந்த – அதேபோல் காலமுகத்திடல் போராட்டத்தில் முன்கள போராளியாக செயற்பட்ட வசந்த முதலிகேவை களமிறக்க அவரின் வயது தடையாக இருப்பதால், அவரின் ஆதரவு பெற்ற ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மக்களின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை அறகலயவின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்துவரும் நாட்களிலும் இது தொடர்பான கலந்தரையாடல்கள் தொடரவுள்ளன.
