நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமான நிலையத்தில் விஐபி முனையத்தில் சோதனையின்றி வருவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் நீக்கப்பட வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.
அலி சப்ரி ரஹீம், நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையை பயன்படுத்தி தவறாக நடந்துகொண்டமையை வன்மையாக கண்டிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அலி சப்ரி ரஹீமை பதவி விலகுமாறுகோரி முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.










