அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தாரா திஸ்ஸ விதாரண?

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் வாக்கைப் பதிவுசெய்தில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (27) இடம்பெற்ற வாக்கெடுப்பு தொடர்பாக பாராளுமன்ற இலத்திரனியல் வாக்கெடுப்புப் பதிவுகளுக்கு அமைய அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண வாக்கைப் பதிவு செய்திருக்கவில்லை.

எனினும், இந்த வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண அவசரகால நிலைமைப் பிரகடனம் தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்ததாக ஒரு சில ஊடகங்களில் வெளியானதால், செயலாளர் நாயகத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டதுக்கு அமைய இந்தக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles