அஸ்வெசும இரண்டாம்கட்ட கொடுப்பனவின்போது பெருந்தோட்ட மக்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வேலுகுமார் எம்.பி. நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
” அஸ்வெசும கொடுப்பனவின்போது தோட்ட பகுதிகளில் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். அதேபோல அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் வழங்கப்படும் எனக் கூறப்பட்டாலும் 5 ஆயிரம் ரூபாவை ஜனவரி முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.” – எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
