5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் அகில இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் சார்பில் பங்கேற்றிருந்த மலையக வீர, வீராங்களைகள் 2 தங்கப் பதக்கங்கள் உட்பட 42 பதக்கங்களை வென்றுள்ளனர்.
உலக சிலம்பம் சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள், தமிழ் நாடு, நாகர்கோவிலில் டிசம்பர் 26 முதல் 29 வரைநடைபெற்றது.
இப்போட்டியில் இலங்கையில் இருந்து பங்கேற்ற வீர, வீராங்களைகளில் மலையகத்தை சேர்ந்தவர்களே முழுமையாக உள்ளடங்கி இருந்தனர்.
குழுவில் இடம்பெற்றிருந்த 4 பெண்களும் மாணவிகளாவர். இருவர் கண்டி, கலஹா. ஏனைய இருவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை இராணுவத்தில் உள்ள வீரர் ஒருவரும் பங்கேற்றிருந்தார். அவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்.
பதக்க விபரம் –
தங்கள் – 02
வெள்ளி -32
வெண்கலம் – 08
பயிற்றுவிப்பாளர்கள் விபரம் –
1. தினேஷ்குமார் – பத்தனை
2. திருச்செல்வம் – தலவாக்கலை
3. கொட்டகலை – ராஜேந்திரன்
அகில இலங்கை சிலம்ப சம்மேளனத்தின் தலைவராக திருச்செல்வமும், பொதுச்செயலாளராக தினேஷ் குமாரும் செயற்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பதக்கங்களின் அடிப்படையில் இந்தியா முதலிடத்தையும், இலங்கை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி இவர்கள் நாடு திரும்புகின்றனர்.






