ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷ் அணித் தலைவராக சகீப் தெரிவு

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணம் நிறைவடையும் வரை பங்களாதேஷ் அணியின் தலைவராக அனுபவ வீரர் சகீப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஜ்முல் ஹஸனுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர், சகீப் அல் ஹசன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, அணியின் தலைவராக சகீப் அல் ஹசன் செயற்படவுள்ளமையையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமான மாற்றமாக முன்னணி துடுப்பாட்ட வீரர் லிடன் தாஸ் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆசியக் கிண்ணத் தொடர் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப சுற்றில் பி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷ் அணி ஆப்கான் மற்றும் இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி செப்டெம்பர் 1 ஆம் திகதி நடைபெறும்.

பங்களாதேஷ் குழாம்

சகீப் அல் ஹசன் (தலைவர்), அனாமுல் ஹக் பிஜோய், முஷ்பிகூர் ரஹீம், அபிப் ஹுசைன், மொஸ்தாக் செய்கத், மஹ்முதுல்லாஹ் ரியாத், செயிக் மெஹிதி, மொஹமட் சய்புதீன், ஹசன் மஹ்மூத், முஸ்தபிசுர் ரஹ்மான், நசும் அஹ்மட், சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன் மிராஷ், எப்டொட் ஹுசைன், பர்வெஷ் ஹொசைன் இமோன், நூருல் ஹஸன் சொஹான், டஸ்கின் அஹ்மட்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles