ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை, பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது.
நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ஓட்டங்கள் குவித்தது. முகமது ரிஸ்வான் 86, அப்துல்லா ஷபிக் 52, இப்திகார் அகமது 47 ரன்கள் சேர்த்தனர்.
D/L முறைப்படி 252 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கியது. குசல் மெண்டிஸ், சமரவிக்ரம, அசலங்க ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி பந்தில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
குசல் மெண்டிஸ் 91, அசலங்க 49, சமரவிக்ரம 48 ஓட்டங்கள் சேர்த்தனர்.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை இலங்கை எதிர்கொள்கிறது.
இலங்கை அணி இதுவரை 6 தடவைகள் ஆசியக்கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. 6 தடவைகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.










