ஆசிரியர் இடமாற்றம் குறித்த அறிவிப்பு

ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்படும் இடமாற்றங்கள் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட நிலைமையின் அடிப்படையில் தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஆசிரியர் இடமாற்ற சபையினால் வழங்கப்பட்ட இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.

தற்காலிக ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான ஆலோசனைகள் மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களுக்கு  கடிதம் மூலம் அறிவிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles