ஆட்டோவை மோதித் தள்ளியது கார் – இருவர் படுகாயம் (படங்கள்)

சாரதி பயிற்றுவிப்பு பாடசாலையால் ஆட்டோவொன்றுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, கார் ஒன்று குறித்த ஆட்டோவுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் ஆட்டோவில் பயணித்த இரு ஆண்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் 17.12.2021 இன்று மாலையேஇவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில் இருந்து கொட்டகலை வரை பயிற்சிக்காக பயன்படுத்திய ஆட்டோ, கொழும்பு கடுவலையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காரில் மோதுண்ட ஆட்டோ பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது.

விபத்து தொடர்பில் திம்புள பத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles