ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
‘ மே 7ஆம் திகதி முதல் 10-ம் திகதிவரை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் இராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினோம். இதில் ஏராளமான தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.” – எனவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலின்போது அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தினோம். குறிப்பாக பிஎஸ்எப் வீரர்கள் வித்வன்ஸக் துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இதன்மூலம் 1,800 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து சுட முடியும்.
தானியங்கி ராக்கெட் லாஞ்சர் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதன்மூலம் 2,100 தொலைவு வரையிலான இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தோம்.
மேலும் 2.7 எம்எம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினோம். இந்த துப்பாக்கிகள்
மூலம் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகள் மற்றும் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. நடுத்தர இயந்திர துப்பாக்கி மூலம் பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த துப்பாக்கிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 600 முதல் 1000 குண்டுகளை சுட முடியும் எனவும் ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் கூறினார்.