பெல்ட் ரோட் முயற்சிகள் மூலமாக பெரும் எண்ணிக்கையான பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் ஆபிரிக்க கண்டத்தில் அதிகரித்த நிலையில் அந்தப் பிராந்தியத்தில் சீன கடன்பொறி இராஜதந்திரம் தொடர்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ஆபிரிக்கர்கள் சீனாவுக்கு 145 பில்லியன் டொலர் கடன்பட்டிருப்பதோடு இந்த ஆண்டில் இதுவரை 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மீளளிக்கப்பட்டுள்ளன.
2018 இல் ஆபிரிக்காவில் சீனாவின் முதலீடு 28 வீதம் பங்களிப்புச் செய்திருப்பதோடு இது பிராந்தியத்தில் அதிகரித்து வரும் கடன் சுமையை குறிக்கிறது. இதில் குறைந்தது 18 ஆபிரிக்க நாடுகள் தமது கடன் பற்றி சீனாவுடன் மறு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.
சீனாவின் “கடன் பொறி” கொள்கை உலகளாவிய பொக்காக மாறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மடகஸ்கார், மாலைதீவு மற்றும் கஜிகிஸ்தான் நாடுகளும் சீன கடனில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
