ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் டில்லி உட்பட வட இந்தியா முழுவதும் உணரப்பட்டது. கட்டடங்கள் குலுங்கின, இதனால் மக்கள் வெளியே விரைந்து சென்றனர்.
ஜலாலாபாத்திலிருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 20 நிமிடங்களுக்கு பிறகு, மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால், நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
நிலநடுக்கதால் வீடுகள் இடிந்து உள்ளன. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.










