ஆப்கான். அணிக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை? சூப்பர்-4 சுற்று இன்று ஆரம்பம்!

ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் சூப்பர்4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன் இன்று அந்த அணியை இலங்கை எதிர்கொள்கிறது.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இந்த நிலையில் சூப்பர்4 சுற்று இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது.

இதன் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் சார்ஜாவில் மோதுகின்றன.

Related Articles

Latest Articles