ஆசியக்கிண்ண கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்டது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் ஓரளவு சிறப்பாக இருந்த போதிலும், பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு சீராக இல்லாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் 7 முறை சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானை துபாயில் எதிர்கொள்கிறது.
ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டதால் ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த சம்பிரதாய மோதலில் ஆறுதல் வெற்றிக்காக களம் இறங்கும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.










