தனக்கு ஆளுநர் பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்று பணியாற்ற தயார் என்று முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவராக செயற்பட்ட பி. ஹரிசன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் ஆளுநர் பதவி வழங்கப்பட்டால் அதனை ஏற்க தயாரா என எழுப்பட்ட கேள்விக்க,
” அது பற்றி பரிசீலிக்கலாம். பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்காமல் இருக்கபோவதும் இல்லை.” – என பதிலளித்தார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 எம்.பிக்கள்வரை ரணிலுக்கு ஆதரவு வழங்க உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
