இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் புதிய தலைவராக புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் எஸ்.ரூபதர்ஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இளைஞர் அணியின் புதிய பொதுச் செயலாளராக சுதேச மருத்துவ வைத்தியரும், சமூக செயற்பாட்டாளருமான ரமேஷ்குமார் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் இதற்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இளைஞர் அணியின் தலைவராக ராஜமணி பிரசாத் மற்றும் பொதுச் செயலாளராக அர்ஜூன் ஜெயராஜ் ஆகியோர் செயற்பட்டு வந்ததோடு, இளைஞர் அணியை சிறப்பாக வழிநடத்தினார்கள்.
இதொகாவின் இளைஞர் அணி தலைவராக செயற்பட்டவர் அமைச்சின் இணைப்பு செயலாளராக செயற்பட்டுவருவதுடன், அதனை சிறப்பாக முன்னெடுப்பதற்காக கூடுதல் பொறுப்புடன் செயற்பட்டுவருகின்றார்.
செயலாளராக செயற்பட்டவர் அரசியல் கிளை தேசிய அமைப்பாளராக செயற்படுகின்றார். அப்பதவியை அவர் சிறப்பாக முன்னெடுக்கும் வகையிலும், புதிய இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலுமே இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளது.










