இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், உப தலைவர் பதவிக்கு ரூபன் பெருமாள் போட்டியிடுகின்றார்.
இது தொடர்பில் கட்சியின் மேல் மட்டத்துக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார்.
30 ஆம் திகதி கூடும் தேசிய சபை முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது. புதிய தலைவரும் இதன்போது தெரிவுசெய்யப்படவுள்ளார். தலைமைப்பதவிக்கு தற்போது இருமுனைப்போட்டி நிலவுகின்றது.
தேசிய சபை உறுப்பினர்களின் ஆதரவை பெறுவதில் தலைமைப்பதவிக்கு போட்டியிடும் இருவரும் தீவிரம் காட்டிவருகின்றனர். அது தொடர்பான பேச்சுகளும் இடம்பெற்றுவருகின்றது.