இ.போ.ச. பஸ்சுக்குள் கத்திக்குத்து தாக்குதல் – ‘சாரதி’ கடத்தல்! கம்பளையில் பயங்கரம்!!

கம்பளை, மாவெல பகுதியில் இருந்து கண்டி நோக்கி இபோச பஸ்ஸில் இன்று காலை பயணித்துக்கொண்டிருந்த நபரொருவர்மீது பஸ்சுக்குள் வைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அதன்பின்னர் அவர் வேனொன்றில் கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

கம்பளை, ரிவர்சைட் பகுதியில் வைத்து பஸ்ஸின் முன்கதவில் இருவரும், பின்கதவில் இருவரும் ஏறியுள்ளனர். அதன்பின்னர் பஸ்சுக்குள் இருந்த குறித்த நபர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிறகு கம்பளை, ஜயமாலபுர பகுதியில், வீதியின் குறுக்வே வேனொன்றை நிறுத்திவைத்துவிட்டு அவரை கடத்திச்சென்றுள்ளனர்.

சம்பவத்தையடுத்து பஸ் சாரதி, பஸ்ஸை கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு ஓட்டின்சென்றுள்ளார்.

” மாவெலயில் இருந்து கண்டிக்கு அதிகாலை 5.15 இற்கு செல்லும் பஸ்ஸில்தான் இவர் வந்துள்ளார். ” என உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சாரதியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார் என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட நபரின் அண்ணனின் மகன் ஒருவரால்தான் இவர் கடத்தப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Latest Articles