இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னாள் இடது கை துடுப்பாட்ட வீரரான கிரேம் தோர்ப் தனது 55 வயதில் காலமானார்.
இங்கிலாந்து சார்பாக அவர் 1993 முதல் 2005 வரை 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 6,744 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ளதுடன் இதில் 16 சதங்கள் அடங்குகின்றது.
தோர்ப் 1993 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது டெஸ்ட் அறிமுகத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 114 ரன்களை குவித்திருந்தார். அத்துடன் 2002 இல் நியூசிலாந்துக்கு எதிராக ஒட்டமிழக்காமல் 200 ரன்கள் எடுத்தார்.
அவர் 2005 இல் கிரிக்கட்டிலிருந்து விலகிய பின்னர் அவர் அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக கடமையாற்றினார்.
தோர்ப் 2022 மார்ச் இல் ஆப்கானிஸ்தானின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இருந்தபோதிலும் அவர் அவ்வணியுடன் இணைவதற்கு முன்னரே கடுமையான நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தோர்பின் மரணத்திற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. இங்கிலாந்து அணி சிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரை இழந்துவிட்டதாக அவ்வணியின் முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கட் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
பேனா