இங்கிலாந்து அணியை பந்தாடுமா ‘குட்டி சிங்கங்கள்’?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குசல் பெரேரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.  இதன்படி முதலாவது 20 ஓவர் போட்டி கார்டிப்பில் இன்று நடைபெறுகின்றது.

இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்கும் இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாசன்ராய், மொயீன் அலி, டேவிட் மலான் என்று அதிரடி பட்டாளங்கள் இருப்பதால் போதிய அனுபவம் இல்லாத இலங்கைக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை நேரப்படி இரவு  11 மணிக்கு போட்டி ஆரங்கமாகும்.

Related Articles

Latest Articles