இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் – முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு (இலங்கை நேரம்) ஆரம்பமாகின்றது.

மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகின்றது.. கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் நடக்கும் இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

அண்மையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து அணி வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும், வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டும் அந்த தொடரில் அமர்க்களப்படுத்தினர்.

அசார் அலி தலைமையிலான பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. துணை தலைவர் பாபர் அசாம், ஆசாத் ஷபிக், வேகப்பந்து வீச்சாளர்கள் ஷகீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, முகமது அப்பாஸ் ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள்.

அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் அளித்த பேட்டியில்,

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது. இதில் வெற்றி பெறும் அணிக்கு 40 புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles