இணக்கப்பாடு எட்டப்பட்டபின்னர் IMF ஒப்பந்தம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் -ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி  மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள  முடியாது நிலை மட்டுமன்றி  எந்தவொரு  நாட்டுடனும்  கொடுக்கல் வாங்கல் செய்யும்   வாய்ப்பை இலங்கை இழக்க நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண வரவு செலவுத் திட்டம் அல்ல எனவும், பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று (21) நடைபெற்ற 2023 வரி மாநாட்டில்  ஆரம்ப உரை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் தவிர்ந்த எந்தவொரு கட்சியோ, நபரோ அல்லது நிறுவனமோ சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளையோ மாற்று வழிகளையோ சமர்ப்பிக்கவில்லை எனவும்  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன்  உடன்பாடு எட்டப்பட்டவுடன்  அதனை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும்  அதனை நிறைவேற்றவோ அல்லது நிராகரிக்கவோ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி  அதனை நிராகரிப்பதாக இருந்தால்  சம்பந்தப்பட்ட தரப்பினர் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாற்று யோசனைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்  தெரிவித்தார்.

எமது நாட்டின் பிரதான கடன் வழங்குநர்களான  பாரிஸ் கிளப், இந்தியா மற்றும் சீனாவுடனான  கடன் மறுசீரமைப்பு  செயற்பாடு    தொடர்பில் கருத்துத் தெரிவித்த  ஜனாதிபதி  , இலங்கைக்கு  நிதி ஒத்துழைப்பு  வழங்குவதற்கு பாரிஸ் கிளப் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும்,   இந்தியா தமக்கு தனித்துவமான  முறையை பின்பற்றுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் பெங்களூரில் நடைபெறவுள்ள ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் அவர்களின் நிலைப்பாடு  குறித்து அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

2023   வரி மாநாட்டை  இலங்கை  சந்தைப்படுத்தல்  நிறுவனம் (SLIM) ஏற்பாடு செய்திருந்தது.   வரிக் கொள்கை தொடர்பான நிபுணர்மட்டக்  கலந்துரையாடலில்  இலங்கை  சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வட்டவல, இலங்கை பட்டய ஆளணி முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் கென் விஜயகுமார், இலங்கை   பட்டயக் கணக்காளர்  நிறுவன தலைவர்  (வரி விதிப்பு ) திஷான் சுபசிங்க மற்றும் வரிக் கொள்கை மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி ஆணையாளர் நாயகம் என்.எம். எம். மிப்லி  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர்  ருவன் விஜயவர்தனவும் கலந்துகொண்டார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles