இந்திய வீடமைப்புத் திட்டம் வீடமைப்பு அமைச்சின் கீழ்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு திட்டம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் இதர விவகாரங்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள தனி அமைச்சு இம்முறை இல்லாது செய்யப்பட்டுள்ளது.

1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியின்போதே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கி சேவையாற்றுவதற்காக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு உருவாக்கப்பட்டது. அவ்வமைச்சு மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு வழங்கப்பட்டது.

எனினும், காலப்போக்கில் அவ்வமைச்சு இல்லாமல் செய்யப்பட்டது. இந்நிலையில் 2015 ஆம் ஆண்டே மீண்டும் மலையக பெருந்தோட்ட மக்களுக்கான அமைச்சு உருவாக்கப்பட்டு, தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூகஅபிவிருத்தி அமைச்சராக திகாம்பரம் நியமிக்கப்பட்டார்.

எனினும், இம்முறை புதிய கிராமங்கள் அமைச்சு   தனி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சாக மாற்றப்படவில்லை.

இன்று வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு என்பன நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்திய வீடமைப்புத் திட்டம் உப்பட பெருந்தோட்டப் பகுதிகளுக்கான வீடமைப்புத் திட்டங்கள் நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles