இந்தியக் கடற்படைக் கப்பலான ஐராவத் கொழும்பு வருகை

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான அதி நவீன ஷர்துல் வகை தரையிறங்கு கப்பலான (எல்எஸ்டி) ஐராவத் இன்று கொழும்பை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி ரிந்து பாபு, மேற்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் டி.எஸ்.கே பெரேராவை சந்தித்தார்.

இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெறுமதியான பல்வேறு உபகரணங்கள் குறிப்பாக இலங்கை கடற்படைக்கான இயந்திரங்கள் உட்பட இயந்திர சோதனை உபகரணங்கள் மற்றும் பரீட்சார்த்த சாதனங்கள் இந்திய கடற்படையின் வெளியுறவு ஒத்துழைப்பு பிரிவின் உதவி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் நிர்பை பப்னா அவர்களால் இலங்கை கடற்படையின் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் KWARI ரணசிங்ஹேவிடம் 2023 ஒக்டோபர் 18 ஆம் திகதி அன்று இக்கப்பலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான உதிரிப்பாகங்கள் உரிய நேரத்தில் கிடைப்பது இலங்கையின் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நட்புறவைக்கொண்டுள்ள அயல் நாடுகளுடனான உறவுகளை வலுவாக்குவதில் நட்புறவுப் பாலங்கள் என்ற சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டு இந்தியக் கடற்படையின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles