இந்தியப் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் முக்கியத்துவம் என்ன? பாதுகாப்பு துறை முதல் செமிகண்டக்டர் வரை..!

பிரதமர் நரேந்திர மோடி பல முறை அமெரிக்கா சென்று ஜோ பைடன் முதல் பல அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களை நேரில் சந்தித்திருந்தாலும், தற்போது முதல் முறையாக அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த பயணம் இந்தியா – அமெரிக்கா மத்தியிலான உறவில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி இந்த பயணத்தில் நியூயார்க், வாஷிங்டன் ஆகிய இரு நகரங்களுக்கு செல்வது மட்டும் அல்லாமல் அரசு முறை டின்னர்-ஐயும் ஏற்க உள்ளார். இந்த பயணத்தின் மூலம் அமெரிக்கா – இந்தியா மத்தியிலான பாதுகாப்பு துறை சார்ந்த உறவு அடுத்தக்கட்டத்திற்கு செல்ல உள்ளதாகவும், அடுத்த சில வருடங்களுக்கு இரு நாடுகள் மத்தியில் பாதுகாப்பு துறை பகிர்மானம் நடக்க உள்ளது.

ஜனவரி மாதம் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு மத்தியில் initiative on critical and emerging technology (iCET) கீழ் இரு நாடுகளும் செயற்கை நுண்ணறிவு, குவான்டம் கம்பியூட்டிங், வான்வெளி பயணம், செமிகண்டக்டர், பாதுகாப்பு துறை தொழில்நுட்பம் ஆகியவற்றின் கீழ் இணைந்து செயல்பட ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து மார்ச் மாதம் அமெரிக்க வர்த்தக துறை செயலாளர் Gina Raimondo இந்தியாவுடன் செமிகண்டக்டர் சப்ளை செயின் பிரிவில் இரு தரப்பு கூட்டணி ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான பியூஷ் கோயல் உடன் கையெழுத்திடப்பட்டது. இதேபோல் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் Lloyd Austin சமீபத்தில் இந்தியா வந்த போது அமெரிக்கா – இந்தியா மத்தியிலான பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்படவும், பல்வேறு தொழில்நுட்பத்தை பகிரவும் INDUS-X ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி இந்த பயணத்தின் மூலம் இரு புதிய ஒப்பந்தங்களும் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல உள்ளது. அமெரிக்கா தரப்பில் இருந்து GE F414 jet engines-களின் கூட்டு உற்பத்தி ஒப்பந்தம் மற்றும் MQ9 sea guardian drones பகிர்வுக்கான ஒப்பந்தம் மோடியின் இந்த பயணத்தில் உறுதியாக உள்ளது.

இதேபோல் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்-ல் செமிகண்டக்டர் அசம்பிளி பேகேஜ் மற்றும் டெஸ்டிங் தளத்தை அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார துவக்கத்தில் அமெரிக்காவின் பிரபலமான செமிகண்டக்டர் நிறுவனமான மைக்ரான் இந்தியாவில் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான 4 அசம்பிளி லைன் கொண்ட செமிகண்டக்டர் சிப் அசம்பிளி மற்றும் டெஸ்டிங் தளத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியானது. Micron நிறுவனம் முதல் கட்டமாக 2.5 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்ய உள்ளதாகவும், மீதுமுள்ள முதலீட்டை அடுத்த 5 வருடத்தில் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளியாக வாய்ப்புகள் உள்ளது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles