இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ்?

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் ஆல்பா, பிட்டா, டெல்ட்டா, ஒமிக்ரொன் என பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது.

இதற்கிடையில், தற்போது உலகின் பல பகுதிகளில் ஒமிக்ரொன் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அந்த ஒமிக்ரொன் வைரஸ் மேலும் உருமாற்றமடைந்துள்ளது. இந்த புதிய வகை உருமாற்றத்திற்கு “XE” வகை வைரஸ் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்த ‘XE’ வைரஸ் முதன்முதலில் கடந்த ஜனவரி 19ஆம் திகதி இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த எக்ஸ்இ உருமாறிய வைரஸ் ஒமைக்ரான் வகையிலேயே மிகவும் வேகமாக பரவக்கூடியது. ஒமைக்ரான் வைரசில் உள்ள பிற திரிபை விட ‘XE’ வகை 10 சதவீதம் அதிக வேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் கண்டறியப்பட்ட இந்த ‘XE’ வகை வைரஸால் இங்கிலாந்து முழுவதும் இதுவரை 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் ‘XE’ வகை கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக மும்பை மாநகராட்சி நேற்று தெரிவித்தது. தென்னாபிரிக்காவில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் மும்பை வந்த ஆடை அலங்கார பெண் கலைஞருக்கு மார்ச் 2ஆம் திகதி கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ‘XE’ வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது.

இந்நிலையில், மும்பையில் கண்டறியப்பட்டது ‘XE’ வகை வைரஸ் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை ஒமிக்ரொனின் உருமாற்றமடைந்த ‘XE’ வகை கொரோனா பரவில்லை. தற்போது உள்ள ஆதாரங்கள் மும்பையில் உறுதி செய்யப்பட்டது ‘XE’ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles