இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தால் சீனா அதிருப்தியடையும்: மொட்டு கட்சி

வல்லரசு நாடுகளுக்கிடையில் அதிகார போட்டி வலுத்துள்ள சூழ்நிலையில், இலங்கையானது இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது மிகவும் ஆபத்தானதாகும் எனவும், இது தொடர்பில் சீனா நிச்சயம் அதிருப்தி அடையும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சியின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்தியாவுடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன எனவும், பாதுகாப்பு சம்பந்தமாகவும் ஒப்பந்தம் உள்ளது எனவும் எமக்கு அறியக்கிடைத்தது. இவை தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தும் என காத்திருந்தோம்.

எனினும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தையும், மக்களையும் அரசாங்கம் இதுவரை (நேற்று) தெளிவுபடுத்தவில்லை. குறிப்பாக பாதுகாப்பு ஒப்பந்தத்திலுள்ள நிபந்தனைகள் என்னவென்பது எமக்கு தெரியவர வேண்டும். இலங்கையென்பது அணிசேரா நாடாகும். எனவே, ஒரு நாடுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டால் அது வெளிவிவகாரக் கொள்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில் விரிசல் உள்ளது. குவாட் பாதுகாப்பு கூட்டணியில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இந்தியாவும் அங்கம் வகிக்கின்றது. குவாட் என்பது சீனாவுக்கு எதிரான கூட்டணியாகவே கருதப்படுகின்றது. எனவே, இந்தியாவுடன் இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடுவது தொடர்பில் சீனா அதிருப்தி அடையக்கூடும்.

இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. எனவே, இலங்கை அதற்கும் கட்டுப்பட வேண்டி ஏற்படக்கூடும்.
சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும் நாடுகளாகும். எனவே, இப்படி செய்வதானது இலங்கையை நன்றி மறந்த சமூகமாக காண்பிக்கக்கூடும்.

இன்று வல்லரசு நாடுகளுக்கிடையில் போட்டி உள்ளது. எனவே, ஒரு அணியுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது ஆபத்தாகும். இலங்கையின் இறையாண்மையென்பது மிக முக்கியமாகும்.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles