சுவிசர்லாந்தின் ஜெனீவா நகரில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
ஐ.நா.வின் 48ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்துவரும் நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும், இன அழிப்பிற்கு எதிராக விசாரணை நடத்தி தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது புலிகளின் கொடிகளை ஏந்தியிருந்ததோடு, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் உருப்படங்களை ஏந்தியிருந்தனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளின் அமைப்பு பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.