இனவாதம் கக்கும் அம்பிட்டிய சுமன தேரரை உடன் கைது செய்க – மனோ வலியுறுத்து

‘தமிழர்களை வெட்டுவேன்’ என கூச்சலிடும் மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமனரத்ன தேரர் ICCPR சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

அம்பிட்டிய சுமனரத்ன தேரோவின் இனவாத கூச்சல் மற்றும் கேவலமான நடத்தை என்பவற்றையும் மனோ கணேசன் கண்டித்துள்ளார்.

” அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மீண்டுமொருமுறை இனவாதம் கக்கியுள்ளார். இதற்கு இனியும் இடமளிக்ககூடாது. நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும். நடு வீதியில் இறங்கி, தமிழர்களை வெட்டிக்கொல்வேன் எனக் கூறும் அந்த தேரருக்கு மனநோயா? அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதை கவனத்தில் எடுக்க வேண்டும். மாறாக வழமைபோல் கடந்துவிடக்கூடாது. மகாநாயக்க தேரர்களும் இந்த தேரரை ஒழுங்குப்படுத்த வேண்டும்.” -எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles