இனவாதம், மதவாதம் மீண்டும் தலைதூக்க இடமளியோம்!

” வடக்கு மக்கள் தெற்கு தலைவர்மீது முதன்முறையாக நம்பிக்கை வைத்துள்ளனர். இது மிக முக்கியமாகும். அம்மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை நாம் நிறைவேற்றுவோம். வடக்கில் உள்ள பிரச்சினைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு காண்போம்.”

இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குருணாகலையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் ஜனாதிபதி இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். யாழ். மக்கள் முதன்முறையாக தெற்கு அரசாங்கம்மீது, தெற்கு தலைவர்கள்மீது நம்பிக்கை வைத்துள்ளதை காண முடிந்தது. இது மிக முக்கியமாகும்.

வடக்கில் உள்ள சில தலைவர்கள் தனி நாடு தருகின்றோம் எனக் கூறியபோதும், அரசியல் பரம்பரையில் வந்தவர்கள் இருக்கின்றபோதிலும் மக்கள் எம்மை தேர்வு செய்தனர். அவர்களுக்கு நிறைய எதிர்பார்;புகள் இருக்கின்றன. அவற்றை நாம் நிறைவேற்ற வேண்டும்.

எம்மிடையே மீண்டும் பிரிவினைவாதம், போர், நம்பிக்கையீனம் என்பன அற்ற அனைவரும் ஒன்றியைணக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குரிய ஆசிர்வாதம் வடக்கு மக்களிடமிருந்து கிடைத்துள்ளது.

30 வருடகால போர் மற்றும் அரசியல் காரணங்களால் வடக்கு பகுதிக்கு அபிவிருத்திகள் சென்றடையவில்லை. அப்பகுதி மக்களின் பிரச்சினைகளை வேகமாக தீர்க்க வேண்டும். இது எமது பிரதான கடமையாகும்.

இனவாதம் மற்றும் மதவாம் தலைதூக்குவதற்கு நாம் இடமளியோம். தேசிய சமத்துவத்தைக் கட்டியெழுப்போம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles