நாட்டில் இன்று நள்ளிரவு முதல் 25 ஆம் திகதி காலை 4 மணிவரை தொடர் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இக்காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வெளியேறும் நடைமுறை பொருந்தாது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருந்தகங்களையும் திறந்து வைக்கலாம். ஏனைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.
அதேவேளை, இக்காலப்பகுதியில் அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றிரவு 11 மணி முதல் அமுல்ப்படுத்தப்படும் தொடர் பயணத்தடை 25 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் அன்றிரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி காலை 4 மணிவரை மீண்டும் பயணத்தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.










