இன்றிரவு மழை பெய்யக்கூடிய சாத்தியம்….!

இன்றிரவு (24) முதல் எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (24) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய,ஊவா, மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு நேரங்களில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30-40 கி.மீ. வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கடல் பகுதிகளில்

காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாகஅம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பகுதிகளில் காற்றானது மணித்தியாலத்திற்கு சுமார் 20-30 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையிலிருந்து வீசும். கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலுமான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 50-55 கி.மீ. வேகம் வரை அதிகரிக்கக்கூடும்.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலுமான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

Related Articles

Latest Articles