நாட்டில் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் தென்மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, வடமத்திய , ஊவா மாகாணங்களில் மற்றும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.










