இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் மாலை வேளையில் 75 மில்லிமீற்றர் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலும், பொலனறுவை மாவட்டத்திலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Latest Articles