இன்று மின் துண்டிப்பு அமுலாகும்

நாட்டில் மின் துண்டிப்பு காலம் இன்றைய தினம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, A முதல் w வரையான வலயங்களில் இன்றைய தினம் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மின் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து வலயங்களிலும் மாலை 5.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் இந்த மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளது.

இதேவேளை, மின்னுற்பத்திக்காக எரிபொருளை வழங்குவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கள் எழுத்துமூலமாக உறுதியளித்துள்ளன.

இதற்கமைய, இந்திய கடனுதவியின் கீழ் நேற்று கிடைக்கப்பெற்ற டீசலில் 12 ஆயிரம் மெற்றிக் டன் மின்னுற்பத்திக்காக வழங்கப்படவுள்ளது.

அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனத்திடம் இருந்தும் 6 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles