நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இன்றும் (13) மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
