இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாட்டில் இன்றைய தினம் (22) 3 மணித்தியாலங்களும்  20 நிமிடங்களும்   மின் விநியோகத் தடையினை  அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

மின்னுற்பத்தி நடவடிக்கைக்கு தேவையான  போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, A முதல் W  வரையான வலயங்களில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணித்தியால   மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக  இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அத்துடன்  மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள்  1 மணித்தியாலமும்  20 நிமிடங்களுக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles