‘இம்முறை புத்தாண்டு வாழ்த்து கூறமுடியாது’

” 2022 ஆம் ஆண்டு மலரும்போது – ‘இனிய புத்தாண்டாக அமையட்டும்’ என இம்முறை வாழ்த்துகூற முடியாத நிலைமை ஏற்படும் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” 2022 ஆம் ஆண்டு மலரும்போது, இனித புத்தாண்டாக அமையட்டும் என இம்முறை வாழ்த்துக்கூட கூறமுடியாத நிலைமை ஏற்படும். ஏனெனில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. வறுமை நிலையும் உருவாகும். பட்டினியால் வாட வேண்டிய நிலை ஏற்படும். நாட்டு மக்களை பட்டினியில் வாடவைத்த அரசு என இந்த அரசு வரலாற்றில் இடம்பிடிக்கும்.” – என்றும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles