இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கு தயார் – பஸில் அறிவிப்பு

இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பான அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பஸில் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

” எமக்கு 69 லட்சம் பேர் வாக்களித்தனர். அவர்களை கைவிடுவதற்கு நாம் தயாரில்லை. மொட்டு கட்சி அழிந்துவிடும் என சிலர் நினைத்தனர். ஆனால் மீண்டு வந்துள்ளோம். உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

எனக்கு அரசியல் செய்வதற்கு இரட்டைக் குடியுரிமை தடையெனில் அதனை துறப்பதற்கு தயார்.” – எனவும் பஸில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles