பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளம் தாயொருவர் தனது இரட்டை குழந்தைகளை விற்பனை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிறந்து சில நாட்களேயான இரட்டைக் குழந்தைகளை 50 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முற்பட்ட இளம் தாயும், குழந்தைகளை வாங்குவதற்கு வந்திருந்த இரு பெண்களும் இன்று காலை ராகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாயும், குழந்தையொன்றை வாங்க வந்திருந்த பெண்ணும் ராகம பகுதியில் வைத்தும், மற்றைய குழந்தையை வாங்கி பெண் களனி பிரதேசத்தில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராகம பிரதேசத்தில் வீட்டு வேலை செய்து வந்த குறித்த தாய், கொழும்பு காசல் மகப்பேறு வைத்தியசாலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒரு குழந்தையை தலா 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய அவர் முற்பட்டுள்ளார்.










